Tuesday, 6 July 2010

தாய்லாந்து கப்பலில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன்!


Prabakaranதாய்லாந்து கப்பலில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன்!
கடந்த ஆண்டு மே மாதம் இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே 4ம் கட்ட போர் நடந்தது. இதில், விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது.
மேலும், விடுதலைப்புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளது. அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டதாகவும் இலங்கை அரசும் ஊடகங்களும் தெரிவித்தன.
ஆனாலும் தமிழ் தேசியவாதிகள் சிலர் பிரபாகரன் கொல்லப்படவில்லை நலமோடு இருக்கிறார்; 5ம் கட்ட ஈழப்போரை நடத்துவதற்கு வருவார் என்றும் சொல்கிறார்கள், அதனை சில‌ தமிழர்கள் ஏற்றுக்கொள்ளவும் செய்கிறார்கள்.
இது ஒரு பக்கம் இருக்க இன்னும் அழிக்கப்பட்டதாக சொல்லப்படும் தமிழீழ விடுதலைப்புலிகளின் பெயரில் அறிக்கைகள் சில ஊடகங்களில் வருகிறது.
இன்னும், தமிழீழ விடுதலைப்புலிகள் இலங்கையில் உளவுப்பணியில் இருக்கிறார்கள். சென்ற வாரத்தில்,மாத்தறையில் முக்கிய அரசியல்வாதிகள்,ஜனாதிபதி மற்றும் முக்கியஸ்தர்களின் பயணங்கள் குறித்து யாசகர் வேடத்தில் உளவுப்பார்த்த தமிழீழ விடுதலைப் புலி ஒருவரை மாத்தறை காவல்துறை கைது செய்தது.
இல்லாத இயக்கத்திற்கா உளவு பார்கிறார்கள்? தமிழீழ விடுதலைப்புகள் இன்னும் இலங்கையிலும் இருக்கிறார்கள்.ஆயுதக்களத்தை மட்டும்தான் இழந்துள்ளார்கள்.இப்படியெல்லாம் தமிழ் உணர்வாளர்கள் சொல்கிறார்கள், கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
இந்நிலையில் தமிழ் தேசியவாதிகளின் கூற்றை உண்மைப் படுத்தும் விதமாக தாய்லாந்து கடலில் விடுதலைப்புலிகளின் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பயங்கரவாதம் தொடர்பான நிபுணர் பேராசிரியர் குணவர்தனா, சன்டே அப்சர்வர் என்ற பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:-
இக்கப்பல் ஆஸ்திரேலியா நோக்கி செல்கிறது. அதில், 200 பேர் பயணம் செய்கின்றனர். இக்கப்பல் கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவை நோக்கி புறப்பட்டது. ஆனால் அட்லாண்டிக் கடலை தாண்டி செல்ல அவற்றின் எந்திரங்கள் ஒத்துழைக்குமா? என்ற சந்தேகம் ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து இக்கப்பலின் பயணப் பாதை மாற்றப்பட்டு ஆஸ்திரேலி யாவுக்கு செல்கிறது. ஹரின் பனிச்-19 என்ற இக்கப்பல் தற்போது எம்.வி.சன் சீ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வினோத் இக்கப்பலின் கேப்டனாக இருக்கிறார். இவர் ஆயுத கடத்தலில் மிக வும் அனுபவம் வாய்ந்தவர். இதில் 3000 பேர் வரை பயணம் செய்யலாம்.
கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் பலவீன மான சட்டங்கள் உள்ளன. எனவே அகதிகள் என்று கூறி அங்கு தஞ்சம் அடைய விடுதலைப்புலிகள் செல் கின்றனர். இக்கப்பலில் விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்களும் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
பேராசிரியர் குணவர்தனா மேலோட்டமாக தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்கள் உள்ளதாக தெரிவிக்கிறார். ஆனால்,தமிழ் தேசியவாதிகளின் நம்பிக்கைப்படி உயிருடன் உள்ள‌ தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அதில் இருந்தாலும் ஆச்சரியமில்லை!
“அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி வரும் இலங்கை அகதிகளின் எதிர்காலம் குறித்து தாம் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் ஒரு தீர்மானம் எடுக்கப் போவதாக தெரிவித்துள்ள அந்நாட்டு புதிய பிரதமர் ஜுலியா கில்லார்ட், இலங்கையில் அப்பாவி சிறுவர்கள் முட்கம்பிகளுக்கு பின்னால் அடைக்கப்பட்டிருப்பதை பார்க்க அவுஸ்திரேலியா ஒருபோதும் விரும்பாது” என கூறியுள்ளதையும் நாம் கவனித்துப்பார்க வேண்டும்.
பேராசிரியர் குணவர்தனா சொல்வதுப்போல் “இக்கப்பல் கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவை நோக்கி புறப்பட்டது. ஆனால் அட்லாண்டிக் கடலை தாண்டி செல்ல அவற்றின் எந்திரங்கள் ஒத்துழைக்குமா? என்ற சந் தேகம் ஏற்பட்டது.அதைத் தொடர்ந்து இக்கப்பலின் பயணப் பாதை மாற்றப்பட்டு ஆஸ்திரேலியாவுக்கு செல்கிறது.”
மேலுள்ள இரண்டு அறிக்கையின்படி பார்த்தால்,அவுஸ்திரேலியா பிரதமர் ஜுலியா கில்லார்டின் நம்பிக்கை வார்த்தையை வைத்தே கப்பல் செல்கிறது;கப்பலின் எந்திரங்கள் நன்றாக இருப்பதாகவே தெரிகிறது.
கணிப்புகள் எப்படியிருந்தாலும் உண்மை சில தினங்களில் வெளிவரத்தான் போகிறது!

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails